Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் விசேட பொதுக்கூட்டம், கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், சபையின் தவிசாளர் கோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
அகவணக்கம் தலைமையுரையைத் தொடர்ந்து பாதீடு தொடர்பான விவாதம் அவையில் இடம்பெற்றது. உறுப்பினர்களால் பாதீடு தொடர்பில் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவை அனைத்தையும் உள்வாங்கி பாதீட்டை சில திருத்தங்களுக்கு தவிசாளர் உட்படுத்தினார்.
இறுதியில் எஸ்.பிரபாகரன் பாதீட்டை முன்மொழிய லயன் சி.ஹரிகரன் வழிமொழிய வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாதீடு தொடர்ந்து 14 நாள்கள் மக்கள் பாவனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago