2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வலிகாமத்தில் காணி சுவீகரிக்க முஸ்தீபு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில், தனியார் காணி உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணியை கடற்படை தளம் அமைப்பதற்கும் சுற்றுலா அதிகாரசபையின் தேவைகளுக்குமாக, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

இது தொடர்பல் தொடர்ந்து கருத்துரைத்த அவர், குறித்த பகுதியில், நாளை மறுதினம் (22) காணி திணைக்களத்தால் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஓர் அங்குள நிலத்தைக் கூட எம்மை மீறி அவர்களால் அளவிடமுடியாதெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X