Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
அச்சுவேலி, வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கார் மோதித் தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் குதிக்கால் அறுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வல்லைப் பாலத்துக்கு மேலே மழை காரணமாக ஏற்பட்ட வழுக்கு நிலையினால் எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.
மோதிய கார் எதிரே உள்ள பாலத்துக்குள் விழுந்து முழுதாக சேதம் அடைந்தது. இருப்பினும், காரில் பயணித்த சாரதி உயிர் தப்பினர்.
விபத்தில் காயமடைந்தவரின் மோட்டார் சைக்கிளும் முற்றாக சேதமடைந்ததுடன், பாலத்தில் தூக்கி வீசப்பட்டமையால் அவரது குதிக்கால் பாலத்துடன் செருகி அறுந்ததாக தெரியவருகின்றது.
இந்த விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025