Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 மே 17 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது பிறந்த வீட்டுக்கு முன்னால் விழுந்து மண்ணை வணங்கிய பொதுமக்கள், முள்ளிவாய்க்கால் பேரணியை, நேற்று (16) ஆரம்பித்தனர்.
2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் மக்களை கொன்றொழித்த யுத்தத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு வாரம், கடந்த 12ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட பேரணி, நடைபவனியாக பருத்தித்துறை நெல்லியடி, அச்சுவேலி, நல்லூர் கந்தசாமி கோவில், யாழ். பல்கலைக்கழகம் ஊடாக யாழ். நகரத்தை வந்தடையவுள்ளது.
பின்னர் யாழ். நகரத்திலிருந்து நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி, கொடிகாமம் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து, அங்கிருந்து நாளை 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சென்றடையவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025