Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் இடம்பெறும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான படிமுறையாக, வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தடை செய்யவேண்டுமென முன்வைக்கப்பட்ட பிரேரணை, வடமாகாண சபையில் இன்று (09), ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் 129 ஆவது அமர்வு, நேற்று நடைபெற்றபோது, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால், இது குறித்த அவசரப் பிரேரணையொன்று, சபையில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில், விவாதங்களும் இடம்பெற்றன.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில், கடந்த காலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியின் இரு மருங்கிலும், வாகனங்கள் தரித்து நிற்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திப்பட்டது.
இதற்காக, ஏ9 வீதியில், பொருத்தமான இடங்களில் வீதிக்கு அப்பால், வாகனத் தரிப்பிடங்களை ஏற்பாடு செய்வதற்கு, வடமாகாண வீதி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகளை, முதலமைச்சர் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago
53 minute ago