2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘வாக்குறுதியின் எதிரொளியே வாடிகள் எரிப்புக்குக் காரணம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடற்றொழில் அமைச்சர் அளித்த வாக்குறுதியின் எதிரொளியாகவே, நாயாற்றுப் பகுதியில் மீன்வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளனவென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், இன்று (14) தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, முல்லைத்தீவுக்கு ஞாயிற்றுக்கிழமை (12) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், இதனைத் தடுப்பதாக உறுதியளித்ததாகவும் அதன் எதிரொளியாகவே, இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றதெனக் குறிப்பிட்டார்.

எனவே, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், இதுபோன்ற சம்பவங்கள், இனிவரும் நாள்களில் இடம்பெறாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்டோர் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .