Editorial / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். றொசாந்த், டி. விஜித்தா, எஸ். நிதர்ஷன்

யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் நின்றிருந்த இளைஞரை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், கொலை செய்யும் நோக்குடன் துரத்தி சென்றுள்ளார்கள். குறித்த இளைஞர் உயிரை காப்பற்றுவதற்காக தப்பி ஓடிச்சென்று அருகே உள்ள கிணற்றினுள் குதித்துள்ளார்.
அப்போது அவரை துரத்திச்சென்ற வாள்வெட்டு குழுவினர் கற்களை கிணற்றினுள் வீசி அவர்மேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அந்த நேரம் அப்பகுதியால் சென்ற பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது வாள்வெட்டுக்குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர்.
இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று நபர்களை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்துள்ளார்கள். இதில் கைதடிப்பகுதியை சேர்ந்த 2 பேரும் கொக்குவிலை சேர்ந்த ஒருவரும் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago