Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், முற்றவெளியில், விகாராதிபதியொருவரின் பூதவுடலைத் தகனம் செய்ய, யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
யாழ்., ஆரியகுளம் - நாகவிகாரை விகாராதிபதி, இயற்கை எய்திய நிலையில், அவரது பூதவுடலை, முற்றவெளியில் தகனம் செய்வதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில், 12 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் பகுதியில், கொட்டடி பொதுச் சந்தை, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வைத்தியசாலை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் காணப்படுவதால், அந்த இடத்தில் தகனம் செய்யக்கூடாது எனவும், பொது இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த பொலிஸ் தரப்பு, இந்தத் தகனக் கிரிகையைத் தடுத்தால், அமைதியின்மை உருவாகும் எனவும் இராணுவத்தினர், தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றே, தகனத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் கூறினர்.
இதனையடுத்தே, நீதிமன்றம் தகன கிரிகையை திட்டமிட்டபடி நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஆஜரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், “இங்கே நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது. இங்கே அடக்குமுறை இராணுவ ஆட்சியே நடக்கின்றது” என்றார்.
எவ்வாறாயினும், முற்றவெளியில், விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்ய, யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago