Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 07 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பதவியைப் பறித்த பேரினவாதக் கட்சியில் இருந்து விலகி, தமது எதிர்கால அரசியலை, தமிழ்த் தேசியப் பாதையில் முன்னெடுக்க வேண்டுமென, வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்படப்டுள்ளதாவது,
“உங்களுடைய கட்சியின் சகாக்களே உங்களை பைத்தியக்கார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனச்சொல்லும் வகையிலும், தனிப்பட்ட தொலைபேசி அழைப்பினை பகிரங்கமாக ஒலிபரப்பும் அளவுக்கும் அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்பும், நீங்கள் அந்த அணியிலேயே தான் தொடர்ச்சியாக தொடருவீர்களேயானால் உங்கள் மீது இன்றைக்கு உண்மையை தெரிந்தோ, தெரியாமலோ உரக்கச்சொன்னீர்கள் என்பதான நல்லபிப்பிராயம் மண்ணாகிப்போய்விடும்.
“எந்தக் காலத்திலும் சிங்களப்பேரினவாதமானது தங்களுக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், தங்களது தவறுகளை எவ்வளவு நியாயப்படுத்தினாலும் மகாவம்ச சிந்தனையின் வழிநின்றும் தமது மேலாதிக்கப்போக்கினில் நின்றும் மாறப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்டு தமிழர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செய்ந்நன்றி மறந்த சிங்கள பேரினவாதத்தை நிராகரித்து , உங்களுடைய அரசியலை தமிழ்த் தேசியம் சார்ந்த பாதையிலே செப்பனிட்டுக்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிடப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025