Niroshini / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் வெளிவாரிப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் போது, பல்கலைக்கழக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை முன்மொழிவதைத் தவிர்க்குமாறு, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மூதவைக் கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு, திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், ஓய்வு பெற்றுச் செல்பவர்களை அவர்களது ஓய்வுக் காலத்தை அனுபவிப்பதற்கு விட வேண்டுமெனவும் அவர்களைத் தேவையான இடங்களில் ஆலோசகர்களாகக் கொண்டு, அவர்களுக்குக் கௌரவத்தை கொடுக்க வேண்டுமெனவும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago