2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தால் சிறுவனின் கை துண்டிக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 25 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன் 

பளையில் கடந்த புதன்கிழமை(21)  இடம்பெற்ற இபஸ்  விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலையிலிருந்து -முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குரவத்து சபைக்கு சொந்தமான பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி - பளைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன்,17இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு இலக்காகினர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X