Freelancer / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் றொபிக்ஷன் (வயது-21) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். நகரில் இருந்து கொட்டடி நோக்கி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .