2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் கிராமத்துக்கு பாடசாலை பஸ் சேவை ஆரம்பம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

புளியங்குளம் பொலிஸ் பிரிவில், திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் உயிரிழந்த சிறுவனின் கிராமமான லைக்கா ஞானம் கிராமத்தில், இன்று (01) விசேட பாடசாலை பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புளியங்குளம் பொலிஸ் பிரிவில், திங்கட்கிழமை (30) அளவுக்கதிகமான சிறுவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோவொன்று விபத்துக்குள்ளானது.

இதன்போது, இவ்விபத்தில் லைக்கா ஞானம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தார்.

புளியங்குளத்தில் போக்குவரத்து வசதியின்மையாலேயே, இவ்வாறு அளவுகதிகமான மாணவர்கள் ஓட்டோவில் பயணித்தமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில், தமது கிராமத்துக்கு பஸ் வசதிகள் இருக்கும் பட்சத்தில், தமது பிள்ளைகள் பாதுகாப்பாக பாடசாலை சென்று வர முடியுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், அது தொடர்பில் வன்னிப் பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, அதிபர் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் ரமன் சிறிவர்தனவுடன் பிரதி பொலிஸ் மா தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்ததற்கமைய, நேற்றிலிருந்து, லைக்கா ஞானம் கிராமத்துக்கு விசேட பாடசாலை பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .