Princiya Dixci / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி, மடத்தடிப் பகுதியில் நேற்று (04) மாலை 4.30க்கு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையிலும் 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago