2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் காயமடைந்த வயோதிபப் பெண் உயிரிழப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த வயோதிபப் பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (06) உயிரிழந்ததாக, தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பரமலிங்கம் சரஸ்வதி (வயது 66) என்பவராவார்.

குறித்த வயோதிபப் பெண், கடந்த மாதம் 28ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதன்போது சுன்னாகம் பகுதியில் தெரு நாய் ஒன்று குறுக்கே வந்ததால் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதில், பின் இருக்கையில் இருந்த குறித்த வயோதிபப் பெண் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .