2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 21 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளனர்.

புலோலி கோழிக்கடைச் சந்தியில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் புலோலி வடக்கைச் சேர்ந்த கந்தசாமி குலநாயகம் (வயது-84) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இறப்பு வீடு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய முதியவர் வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய வல்வெட்டித்துறையை சேர்ந்த வேலுப்பிள்ளை அரியரட்ணம் (வயது 68) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்தார்.

குறித்த முதியவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஆவரங்கால் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கூலர் ரக வாகனத்தின் கதவை திடீரென சாரதி திறந்ததால் விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X