2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் முதியவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 02 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆறுகால்மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் விஜயராசா என்ற முதியவரே உயிரிழந்தவராவர்.

குறித்த முதியவர் மானிப்பாய் வீதி ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வருபவர் எனவும்,  இன்று (02) காலை வழமை போன்று வீட்டில் இருந்து தனது வியாபார நிலையத்தை திறப்பதற்காக நடந்து சென்று வீதியை கடக்க முற்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதித் தள்ளியுள்ளது.

இதனால் வீதியில் தூக்கி எறியப்பட்ட முதியவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .