2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் முதியவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.உடுவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

மருதனார்மடம் சந்தையில் நேற்று (25) திங்கட்கிழமை மரக்கறிகளை வாங்கிக்கொண்டு குறித்த முதியவர் உடுவில் மானிப்பாய் வீதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாரவூர்தி ஒன்றினை முதியவர் முந்தி செல்ல முற்பட்ட போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியது.

குறித்த விபத்தில் முதியவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்படனர்.

வைத்திய சாலையில் முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .