2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விபத்துக்குள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- செந்தூரன் பிரதீபன்

நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணர் லேன் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கந்தையா அரியரட்ணம் வயது (79) என்ற முதியவரே உயிரிழந்தவர் ஆவார். கடந்த மாதம் 11ஆம் திகதி காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி செல்வதற்காக வீதியால் சென்று கொண்டிருந்துள்ளார். இதன் போது பழைய பூங்கா அருகில் வீதியைக் கடந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரை சடுதியாக மோதி தள்ளியுள்ளது. காயங்களுக்கு உள்ளான முதியவரை வீதியால் சென்றவர்கள் காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையிலேயே அவர் இன்று அதிகாலை உயிரழிந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .