Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 நவம்பர் 05 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மற்றவர்களை விமர்சிப்பதால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து விடும் என கஜேந்திரகுமார் நினைக்க கூடாது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (05) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் கோரியுள்ளார் என அறிந்து கொண்டோம். அவர் என்ன செய்ய போகிறார் எனஇன்னும் மக்களுக்கு சொல்லவில்லை. ஊடகவியலாளர்களுக்கும் எதுவும் சொல்லி இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
ஏனைய கட்சிகளை விமர்சிப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கலாம் என்றோ தனது அரசியலை முன்னெடுக்கலாம் என்றோ நினைப்பது தவறு.
தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்ய போகிறார். அஹிம்சை ரீதியாக போராட போகிறாரா அல்லது ஆயுத ரீதியாக போராட போகிறாரா அல்லது தொடர்ந்து ஏனையவர்களை விமர்சித்துக்கொண்டு தான் இருக்க போகின்றாரா?
மக்கள் அவர்களுக்கும் வாக்களித்து உள்ளனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு தாம் என்ன செய்ய போகின்றோம் என்பது பற்றி எதனையும் கூறாமல் மற்றவர்களை தொடர்ந்து குறை கூறிக்கொண்டும் விமர்சித்தும் கொண்டு இருப்பது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேறுமாறு தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த எவரும் எம்மை கோரவில்லை. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னேடுக்கப்பட்ட எழுக தமிழுக்கு நாம் பூரண ஆதரவு அளித்திருந்தோம். எனவே பேரவை என்பது ஒரு கட்சியல்ல. அது பல கட்சிகளின் கூட்டு” என மேலும் தெரிவித்தார்.
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago