2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வீடொன்று தீயிட்டு எரிப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 30 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் 3 பிள்ளைகளுடைய ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு இன்று (30) அதிகாலை விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பமானது தமது வீடானது குடிசையாக உள்ளதனால், அவர்கள் அருகில் உள்ள அயலாரது வீட்டில் உறங்குவதே வழமையாகும்.

அந்த வகையில் நேற்றைய இரவும் குறித்த குடும்பம் அயல் வீட்டில் உறங்க சென்ற பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர்களது உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் இச் சம்பவம்  தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X