2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை, நேற்று (04) இரவு, இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். 

நேற்று முன்தினரவு 9.30 மணியளவில் திடீரென்று உட்புகுந்த கும்பலொன்று, வீட்டில் கண்ணாடிகள், ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. 

தாக்குதல் நடத்தியவர்கள், கன்டர் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக, வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .