2025 மே 21, புதன்கிழமை

வீட்டுத்திட்டங்களுக்கு ‘வனவளப்பிரிவு முட்டுக்கட்டை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில், தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் கொண்டுவரப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு, வனவளப்பிரிவு தடையாக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு செல்வபுரம் மாதிரி கிராம திறப்பு நிகழ்வு நேற்று (04) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கட்சி பேதம் இன்றி, பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள், தங்கள் வட்டாரங்களில் இரண்டு வீட்டுத்திட்டங்களையும் அதற்கான ஆட்களையும் காணிகளையும் தெரிவுசெய்து அடையாளம் காட்டித் தர முடியுமானால், ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினரும் ஆகக்கூடியது ஐந்து வீட்டுத்திட்டங்களையாவது அடையாளப்படுத்தித் தருமாறும், அதனை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்து தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களுக்கு, வனவளப்பிரிவினர் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அவர்கள் எல்லை போட்டிருக்கும் நிலங்களை எல்லாம், காடுகள் என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தொடர்பில், இங்கு வருகைதந்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சருக்கு நேரடியாகத் தெரியப்படுத்தி, சட்டவிரோத மீன்பிடி முறைமைகளுக்கான சகல அனுமதிகளையும் இரத்துச் செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .