Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 23 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு (22) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது வீதியில் பணப்பை ஒன்று இருப்பதனை அவதானித்தனர். குறித்த பையில் 35 ஆயிரம் ரூபா பணம், தங்க ஆபரணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணப்பட்டன.
அந்தப் பணப்பை ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மதகுரு ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது.
இது குறித்து அந்த மதகுருவுக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் பொலிஸ் நிலையத்திற்கு வந்த மதகுரு தனது பையினை பெற்றுக்கொண்டு பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துச் சென்றார்.
ஊர்காவற்துறை பொலிஸாரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
49 minute ago
2 hours ago