2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீரவாணியில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

Princiya Dixci   / 2021 மார்ச் 28 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் -  புத்தூர், வீரவாணி பகுதியில், தனிமையில் வசித்த குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் 

7 பிள்ளைகளின் தந்தையான துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே, இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28) அதிகாலை 1 மணியளவில், அவரது வீட்டுக்கு அருகில் வைத்து, இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருடன் இருந்த பழைய பகையை வைத்தே சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X