2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘வெயில் வைத்து விற்க வேண்டாம்’

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ் குடாநாட்டில், அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக, வெயில் உள்ள இடங்களில் வைத்து குடிநீர் போத்தல்கள், மென்பானங்கள், இளநீர் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டாமென, வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த அறிவுறுத்தலை மீறி செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மென்பானம், குடிநீர் போத்தல்கள் வெயில் வைக்கும்​ போது, அதிக வெப்பம் அவற்றின் மீது பட்டால், அவற்றில் உள்ள இராசாயன பதார்த்தங்கள் பழுதடையும் அபாயம் உள்ளதாகவும் அதனை பொதுமக்கள் வாங்கி பருகும் போது, நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் ​சுகாதரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதிகளில் உள்ள பல கடைகளில், இவற்றை கடைகளுக்கு வெளியே அடுக்கி வைத்து காட்சப்படுத்தியுள்ளதாகவும் வீதியோரங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிகக் கடைகளிலும் அவை வெய்யிலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அது தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .