2025 மே 03, சனிக்கிழமை

வெளிநாட்டு பெண்ணுக்கு யாழில் நடந்த கொடூரம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கோவளம் கடற்கரை பகுதிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியான ஸ்பானிஷ் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகர் கோவலன் கடற்கரை பகுதியை சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மது போதையில் இருந்த சிலர் அங்கு பாலியல் ரீதியான முறையில் தொந்தரவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸ் காவல் அரணில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X