2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தடை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிமாவட்ட வியாபாரிகள் சாவகச்சேரி நகர் பகுதியில் தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட நகர சபை அனுமதிக்கக்கூடாது என சாவகச்சேரி வணிகர் மன்றம் விடுத்த கோரிக்கையை நகர சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வியாபாரங்களை முன்னெடுப்பதால் நிரந்தரமாக சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளும் உள்ளுர் வியாபாரிகள் நட்டங்களை எதிர்நோக்குவதால், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என நகர சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விடயம் சாவகச்சேரி நகர சபை கூட்டத்தில் ஆராயப்பட்டதையடுத்து நகர் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், அவ்வாறு வழங்குவதாயின் நகரில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பாலே வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி வழங்குவதாகவும் சபையில் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .