2025 ஜூலை 02, புதன்கிழமை

‘வேட்பாளர்களை அறிவித்த பின்னரே எமது நிலைப்பாடு அறிவிக்கப்படும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்  

ஜனாதிபதித் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளில் யார், யார் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னரே, தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமென, கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் முதற்கொண்டு அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு எழுத்துமூல உறுதிமொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் வழங்க வேண்டுமென்பதே, தமது பொதுவான கோரிக்கையாக இருப்பதாகவும், அவர் கூறினார்.  

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களுக்கென பல பிரச்சினைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக எழுத்து வடிவமாக யார் தருகின்றார்களோ, அந்த வடிவத்துக்கு மூன்றாம் தரப்பினரின் உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்திலே, அவருக்குத் தாங்கள் தங்களுடைய ஆதரவைக் கொடுப்போமெனவும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .