2025 மே 14, புதன்கிழமை

வேதநாயகத்தை இடமாற்றுவதற்கு எதிர்ப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகத்தை இடமாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு, இந்த இடமாற்றும் நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன், இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், என்.வேதநாயகம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறாரெனவும் அவரைப் போன்று உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படக் கூடிய அதிகாரிகள் அவசியமமெனவும் கூறினார்.

இவரது சேவை முடிவடைய இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்த அவர், இவரைப் போன்ற அதிகாரிகள், இன்னும் இருக்கின்ற கொஞ்ச காலத்தில் தமது மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்வார்களெனவும் கூறினார்.

தற்போது வடக்கு மாகாணத்தில் மாவட்டச் செயலாளர்களை இடமாற்றம் செய்யும் போது, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரை இடமாற்ற வேண்டாமென்றும் கோரினார்.

இது சம்பந்தமாக, ஜனாதிபதிக்கு கோரிக்கைக் கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சகாதேவன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .