Editorial / 2024 ஜூலை 16 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவை, சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணை மற்றும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுத்துள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் மீதான விசாரணைகள் செவ்வாய்க்கிழமை (16) மன்றில் நடைபெற்றது. பிரதிவாதியான வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்தார்
வழக்கு விசாரணைகளை அடுத்து, வைத்தியரை 75ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்த நீதிமன்றம் , வைத்தியசாலைக்கு செல்லவோ , நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் முகநூல் நேரலையிலையோ ,பதிவுகள் ஊடாக கருத்து தெரிவிக்கவோ கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
அதேவேளை, குற்றம் சாட்டிய மற்றைய வைத்தியர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலங்களை வழங்குமாறும் வைத்தியர் அருச்சுனாவுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.
அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்க தவறினாலோ , அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினாலோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
59 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago