Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 23 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.
அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மருத்துவர் இராமநாதன் அர்சுணா...
சுகாதார அமைச்சு தனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
இதேவேளை இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துளநிலையிலும் எமது மக்கள் போராடி வருகின்றனர்.
சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார்.
அதார வைத்தியசாலை ஊழலை வெளிக் கொண்டுவந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது.
ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். R
22 minute ago
28 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
56 minute ago