Freelancer / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணையும் , அவரிடம் இருந்து மீட்கப்பட்ட போதை பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர். (a)
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago