2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அத்தி மரத்தில் காணப்பட்ட 30 இற்கும் மேற்பட்ட பாம்புகள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பாலாவி ஹிஜ்ரத்புரம் கிராம வீடொன்றில் உள்ள அத்தி மரமொன்றில் 30 இற்கும் அதிகமான பாம்புகள் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப்பிணைந்து காணப்பட்டமை அக்கிராமத்தில் மட்டுமன்றி புத்தளம் பிரதேசத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

30 இற்கும் மேற்பட்ட மூன்று வகையான பாம்புகள் கடந்த மூன்று தினங்களாக மரத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பகல் வேளைகளில் மட்டும் மரத்தில் காணப்பட்ட மேற்படி பாம்புகளை விரட்டியடிப்பதற்காக கிராம மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்காமையினால்; நேற்று நள்ளிரவு பாம்புகள் குடிக்கொண்டிருந்த மேற்படி மரத்திற்கு தீவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .