2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் பிரதேச செயலகத்தில் 31 பட்டதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)


புத்தளம் பிரதேச செயலக  பிரிவிக்குட்பட்ட 31   பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள்  இன்று நடைபெற்ற புத்தளம் பிரதேச  ஒருங்கிணைப்பு குழுக்  கூட்டத்தின் போது  வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆட்சேர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின்  கீழ்  இந்த  பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

புத்தளம் பிரதேச  செயலக ஒருங்கிணைப்புக்  கூட்டம் சமூக நலன்புரி சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் எஸ் பெர்ணான்டோ தலைமையில்  புத்தளம் பிரதேச  செயலகத்தில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேச  செயலகத்தினால்  2012ஆம் ஆண்டுக்காக புத்தளம் பிரதேச  செயலகப் பிரிவில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டன.

புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். டீ. எம் தாஹிர், சிந்தக மாயாதுன்ன, புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X