2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

புத்தளம் கைது செய்யப்பட்ட 8 மாணவர்கள் உட்பட 10 பேர் பிணையில் விடுதலை

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் புதுக்குடியிருப்பு  9ஆம் வட்டார கடற்கரையோரத்தில் கடந்த மே மாதம் கரையொதுங்கிய ஆணின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 8 மாணவர்கள் உட்பட 10 பேரையும் பிணையில் செல்வதற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

மரணமான குறித்த நபர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த அறிக்கை நீதிமன்றிலும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மரணம் தொடர்;பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்து தொடர்ந்து 3 மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 மாணவர்கள் உட்பட 10 பேரும் மீண்டும் விசாரணைக்காக நேற்று நீதிமன்றில் ஆஜர்பத்தப்பட்டனர்.

இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் அவர்களுக்கு பிணை வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையிலேயே இவர்கள் ஒவ்வொருவரும் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .