2025 மே 22, வியாழக்கிழமை

சுற்றி வளைப்புகளினூடாக 84 இலட்சத்து 25500 ரூபா வருமானம்

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் அநுராதபுரம் மாவட்டப் பிரிவினால் கடந்த வருடத்தில் 1295 சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதோடு இதனூடாக அரசாங்கத்திற்கு 84 இலட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா நிதி வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அநுராதபுரம் அலுவலகப் பிரதானி பீ. ஏ. பீ. சீ. பெரேரா தெரிவித்தார்.

காலாவதியான தண்ணீர் போத்தல்கள் மற்றும் பான வகைகளை விற்பனை செய்தமை, விற்பனை விலையை மாற்றம் செய்தமை ஆகிய மோசடிகளே கடந்த வருடம் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

சதொச, கோப் சிட்டி உட்பட பிரபல வியாபார நிலையங்களிலும் இம்மோசடிகள் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X