Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
கெப்பிட்டிகொல்லாவ, அதாகட பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் கெப்பிட்டிகொல்லாவ, மதவாச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கபபட்டுள்ளனர்.
புல்மோட்டையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றே பாதையைவிட்டு விலகிச் சென்று அருகிலிருந்த வயல் வெளிக்குள் குடைசாய்ந்துள்ளதாக கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்ஜித் கும்புரேகம தெரிவித்தார்.
ஏ.அஸங்க என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 10 பேரில் இருவர் கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலையிலும் ஏனையோர் மதவாச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago