2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பகிடிவதை காரணமாக 11 பிக்கு மாணவர்கள் பல்கலையிலிருந்து நீக்கம்

Super User   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரோஹன, சந்திரசேன)

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 பிக்கு மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தியமையே இதற்குக் காரணமாகும்.

இவர்களைத் தவிர மேலும் 26 பேருக்கு 2 வருடம் முதல் 3 வருடகாலம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழத்தின் உபவேந்தர் வண.தும்புள்ளே சீலாகந்த தேரர் கூறினார்.

ஒழுக்காற்று விசாரணைகளின் பின்னர் பல்கலைக்கழக பேரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் இடையூறுகளை ஏற்படுத்தியதில் இவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டதாகவும் உபவேந்தர் வண.தும்புள்ளே சீலாகந்த தேரர் கூறினார்.

இம்மாணவர்கள் முன்னர் எழுதிய பரீட்சைப் பெறுபேறுகளையும் வெளியிடாமல் நிறுத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் இருவர் அடங்கிய குழுவொன்று இந்த ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டது.

 


You May Also Like

  Comments - 0

  • ar Thursday, 08 December 2011 12:08 PM

    தீர்ப்பில் கடைசி வரைக்கும் உறுதியாக இருந்தால் மிக்க நன்றி.

    Reply : 0       0

    bzukmar Thursday, 08 December 2011 02:13 PM

    பிக்குகளில் இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் தானே ,மன்னித்து விடுங்கள். நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் அவர்களில் இருந்து தான் உருவாகும்.

    Reply : 0       0

    Ossan Salam - Doha Thursday, 08 December 2011 03:54 PM

    இந்த பிக்குகள் பல்கலைக்கழகம் வருவதற்காக தான் பிக்குவானார்களா ? அஹிம்சையை போதிக்க வேண்டியவர்கள் எப்படி மற்றவர்களை வதை செய்யலாம் ? சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X