2025 மே 22, வியாழக்கிழமை

வடமத்திய மாகாணத்தில் 15 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்தில் 15 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய அரசாங்கம் இணைந்து மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் அமைச்சு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எச். பீ. சேமசிங்க தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் சிறுநீரக நோய் மிக வேகமாகப் பரவி வருகின்றது. சிறுநீரக நோய் ஏற்படுதல் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி, பதவிய, கெப்பித்திகொள்ளாவ, மெதிரிகிரிய ஆகிய பகுதிகளிலேயே சிறுநீரக நோய் அதிகளவில் பரவி வருகின்றது.

இப்பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை பதவிய மற்றும் ஹிங்குரன்கொட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாகாண சுகாதார அமைச்சர் எச். பீ. சேமசிங்க தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X