2025 மே 23, வெள்ளிக்கிழமை

அனுமதியின்றி மதுபானம் விற்றவருக்கு 15,000 ரூபா அபராதம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
அனுமதிப் பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவருக்கு 15,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு கெப்பித்திகொல்லாவ மாவட்ட நீதவான் கயான் மீகஹகே உத்தரவிட்டார்.

ககுல்பெந்திகிலிய குடாகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் அனுமதி பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் ஹொரவப்பொத்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுப்பப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கமைவாக இவ் அபராதொகையை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஹொரவப்பொத்தானை குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் தர்மாசறி தலைமையிலான குழுவினரால் மேற்படி நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X