2025 மே 14, புதன்கிழமை

ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட 20 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்    

கடந்த 3 நாட்களாக  அநுராதபுரத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும்; மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, ஹெரோயின் பாவனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அநுராதபுரம் விஜயபுர, மைலகஸ் சந்தி, புதிய நகரம், 3ஆம் ஒழுங்கைப்பகுதி, புபுதுபுர ஆகிய பகுதிகளிலேயே மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்களில் அதிகமானோர் உயர்தரம் வரையில் கல்வி கற்றவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .