2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

2013 ஆம் ஆண்டுக்குள் வட மேல் மாகாண பாதைகள் காபட் பாதையாக மாறும்: மாகாண அமைச்சர்

Super User   / 2012 ஜனவரி 10 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா, எம்.ஹிஜாஸ், ஜூட் சமன்த)

எதிர்வரும் 2013 ஆம் ஆண்டுக்குள் வட மேல் மாகாண சபையின் பொறுப்பிலுள்ள அனைத்து பாதைகளும் காபட் பாதையாக மாற்றப்படும் என வட மேல் மகாண கடற்றொழில், வீதி, மின்சாரம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சனத் நிசான்த தெரிவித்தார்.

சிலாபம், இரணவில உணவகத்தில் இன்று இடம்பெற்ற புத்தளம் மாவட்ட செய்தியாளர்களுடனான  சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.

வடமேல் மாகாண சபையின் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளித்த மாகாண அமைச்சர் 2012 ஆண்டில் தமது அமைச்சு முன்னெடுக்க திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன் போது விளக்கமளித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வீதி அபிவிருத்தி போன்று மின்சார திட்டமும் மாகாண சபையால் முன்னெடுக்கப்படுகின்றது. மாற்று மின்சக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்தை காணாத கிராமங்களுக்கு இவ்விரு வருடங்களுக்குள் சூரிய மின்சார திட்டம் (சோலா பவர்) மின் கருவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதுடன் கடல் பிரதேசத்திற்குள் அமைந்துள்ள தீவுகளுக்கு சோலா பவர் தற்போது புத்தளம் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை 2012 ஆம் ஆண்டில் 2,561 திட்டங்களுக்கு 6,515 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்அதன் சூலம்இசிறியஇநடுத்தர மின்சார செய்றபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

.அதே வேளை வடமேல் மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு ஒரு இலட்சம்  முதல் 10 இலட்சம் ரூபா வரை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும்,அதனை தமது அமைச்சும், அரச முதலீட்டு வங்கியும் இணைந்து நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .