2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் 2500 பேர் பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் 23 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாச்சியாதீவு குளம், நுவரவாவி, திஸாவாவி, கலாவாவி, ஏரு வாவி, பதவியா குளம், விலச்சி குளம், மஹகனந்தர வாவி, ஹுருலுவாவி உள்ளிட்ட பெரிய குளங்கள் அனைத்தினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்திலுள்ள தாழ்நிலப்பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. 

நாச்சியாதீவு குளத்தின் 6 வான் கதவுகளும் 5 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளதால் மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித் ஸ்ரீதுள்ளது.

இவ்வாற்றின் நீர் மட்டம் தொடராக அதிகரித்து வருவதால் ஜயந்தி மாவத்த, மல்வத்து லேன், ஜயசிரிபுர, யசசிரிபுர, அலுத்கம, விலச்சிய உட்பட்ட பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டகன்று பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.   

கலாவாவியின் நீர்மட்டம் அதிகரித்து அதன் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாலும் ராஜாங்கனய குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட் டுள்ளதாலும் கலா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்ததால் பெரும்பாலான குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு அகன்றுள்ளனர்.

ஹுருலுவாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் யான் ஓயா பெருக்கெடுத்து கோன்வௌ, ஹொரவ்பொத்தான, ரத்மலை பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மஹகனந்தரவாவி, இக்கிரிகொள்ளாவ குளங்கள் வான் போட ஆரம்பித்துள்ளதால் ரம்பாவ, இக்கிரிகொள்ளாவ பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

ஹொரவ்பொத்தான குளம் வான்போட ஆரம்பித்துள்ளதால் ஹொரவ்பொத்தான நகரம் 4 அடிக்கு மேல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இக்குளத்து நீர் பெருக்கெடுத்துள்ளதால் மறுபுறம் கிவுளேகட கிராமத்தின் வீடுகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளப்பெருக்கின் காரணமாக அநுராதபரம் மல்வத்து லேன், சிங்ககனு பகுதி, தூபாராம பகுதி, கம்பிரிகஸ்வௌ - அநுராதபுரம் வீதி, கோவில்பந்தாவை- பரசன்கஸ்வௌ வீதி, ரம்பாவை தொடக்கம் மதவாச்சி வரையான ஏ-9 வீதி ஹொரவ்பொத்தான- வவுனியா வீதி, ஹொரவ்பொத்தான- திருகோணமலை வீதி, ஹொரவ்பொத்தான- கரடிக்குளம் வீதி போன்ற வீதிகளின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அத்தோடு அநுராதபுரம்- வவுனியா, அநுராதபுரம்- கொழும்பு புகையிரத சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X