2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீடற்ற வறிய குடும்பங்களுக்காக 30 வீடுகள் நிர்மாணம்

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.மும்தாஜ்

புத்தளம் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொத்தாந்தீவு பிரதேசத்தில் வீடற்ற வறிய குடும்பங்களுக்காக 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

மேர்சி லங்கா நிறுவனத்தின் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த வீடமைப்புத் தொகுதியினுள் பாலர் பாடசாலை மற்றும் கலாசார மண்டபம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கு மின்சார வசதிகள் மற்றும் நீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை கட்டார் நாட்டைச் சேர்ந்த ரஹ்மா சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹமட் பின் முஹமட் ஏ.சஹ்வான, மேசி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் குவைட் நாட்டைச் சேர்ந்த வதிவிடப் பிரதிநிதி நசார் ஹசன் அபூ ஜுவைத் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது புனித ரமழானை முன்னிட்டு அப்பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X