2025 மே 22, வியாழக்கிழமை

நாச்சியாதீவில் 37 குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                    

அநுராதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக நாச்சியாதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 132பேர் இடம்பெயந்துள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.டப்ளியு.எஸ்.கித்சிரி தெரிவித்தார்.

இடம்பெயந்துள்ள குடும்பங்கள் மடவளகம, சிராவஸ்திபுர, வடக்கு கனவில ஆகிய பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக ஹிதோகம பாவக்குளம், ஹீன்எல, மடவளகம உட்பட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அதிகரிக்கும் வெள்ளப் பெருக்கினை தடுக்கும் நோக்கில் நீர்ப்பாசனத் திணைக்களம், ஹிதோகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஸ்தூரியாராச்சி, பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினரின் தலையீட்டில் மாற்று வாய்க்கால்கள் வெட்டப்பட்டு நீரை வலிந்தோடச் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X