2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

இவ்வருட பொஸன் போயாதினத்தில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த நபரொருவரிடம் இலஞ்சமாக 20,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட உபபொலிஸ் பரிசோதகரொருவர் உட்பட 4 பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் இன்று புதன்கிழமை முதல் சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக  மிஹிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
    
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றம்பாவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 25 சாராய போத்தல்களை குறித்த பொலிஸ் குழு கைப்பற்றியது. இதில் மூன்று போத்தல்களை மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதகாகக் கூறி இவர்கள் 20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே உபபொலிஸ் பரிசோதகரொருவர் உட்பட 4 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X