Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் - தில்லையடி பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் வயது சிறுவன் ஒருவன் உட்பட 7பேர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இச்சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தங்களது உறவினர்களைப் பார்ப்பதற்காக பிரான்ஸிலிருந்து வந்த சிலர் பயணித்துக்கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்தில் சிக்குண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வானில் பயணித்துக்கொண்டிருந்த 5 வயதுச் சிறுவன், இரு பெண்கள் உட்பட ஏழு பேரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
suren Wednesday, 10 August 2011 02:38 AM
பிரான்சில் இருந்து வந்து இங்குதான் உங்களின் கஸ்ர காலத்தினை அனுபவிப்பதா?...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago