2025 ஜூலை 09, புதன்கிழமை

கஞ்சா புகைத்த 7 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த மற்றும் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் உட்பட 10 பேரை  பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்தனர். 

அநுராதபுரம் விஜயபுர, விஜயபுர சந்தி, விஜயபுர லஹிரு விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா புகைத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் உட்பட 7 பேரும் கஞ்சா பைக்கட்டுக்களை  வைத்திருந்ததாகக் கூறப்படும் 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலேசனைக்கு அமைய விசேட குற்றத்தடுப்புப்  பிரிவின் பொறுப்பதிகாரி எரிக் அலககோன் உள்ளிட்ட குழுவினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .