2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.மு ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு; 7பேர் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கைகலப்பின் போது வாகனம் ஒன்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு ஆதரவாளரின் சுவரொட்டியில் மற்றுமொரு ஆதரவாளரின் சுவரொட்டி ஒட்டப்பட்டதையடுத்தே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X